Tuesday, April 10, 2007

இது எல்லாம் ஒரு பொழப்பா?

இது எல்லாம் ஒரு பொழப்பா?

-ஏமாற்றி பிழைப்பது ஒரு பொழப்பா
-திருடி பிழைப்பது ஒரு பொழப்பா
-வஞ்சித்து பிழைப்பது ஒரு பொழப்பா
-பொய் சொல்லி பிழைப்பது ஒரு பொழப்பா
-பிச்சை எடுத்து பிழைப்பது ஒரு பொழப்பா
-அடித்து பிடிங்கி பிழைப்பது ஒரு பொழப்பா
-கூட இருந்தே குழி பறித்து பிழைப்பது ஒரு பொழப்பா
-அடுத்தவன் குடியை கெடுத்து பிழைப்பது ஒரு பொழப்பா
-காலை வாறி பிழைப்பது ஒரு பொழப்பா
...

- இதற்காக எப்படி எல்லாம் வாழகூடாதோ அப்படி எல்லாம் வாழ்ந்து இப்படி தான் வாழனும் என்று பிழைப்பது ஒரு பொழப்பு தான்.

-இப்படி எல்லாம் எழுதி பிழைப்பது ஒரு பொழப்பா
அதற்கு இப்படி வாழாமலே போய்விடலாம்

Monday, April 9, 2007

மரணத்தை நோக்கி

ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் ஒவ்வொரு பயணத்தில் போகின்றனர். பயணத்தின் நோக்கமும் அது போய் சேரும் இடமும் வெவ்வேறாக இருந்தாலும், கடைசியில் எல்லோரும் மரணத்தை நோக்கியே போகிறோம் என்பதை மறுக்க முடியாது. மரணத்தை பற்றிய தெளிவும் , மரணதிற்கு பின் நடக்க போகும் நிகழ்வுகளும் பற்றி தெரிந்து இருந்தால் மனசுக்குள் ஆத்திரமும், அவசரமும் தலை தூக்க வாய்ப்புகள் ரொம்ப குறைவே. இதனால் என்ன ஆகும். மனசு சந்தோசமா இருக்கும். மனசு சந்தோசமா இருந்தா ரொம்ப நாள் உயிர் வாழலாம். ரொம்ப நாள் வாழ்ந்து ...அப்புறம் என்ன போக வேண்டிய இடத்துக்கு போய் சேர வேண்டியது தான்.